பிள்ளை பிடிக்க வந்ததாக வடமாநில ஆடவரை தாக்கிய கிராமத்தினர்

1 mins read

புதுக்கோட்டை: இந்தியில் பேசிய ஆடவர் ஒருவரை புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள மதயானைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தோர் நேற்று முன்தினம் மாலை அடித்து உதைத்தனர். அவரது மொழி புரியாத நிலையில் குழந்தை கடத்த வந்ததாக நினைத்து மாலை நான்கு மணியில் இருந்து அவரைத் தாக்கினர். சம்பவத்தை அறிந்து விரைந்து வந்த போலிசார் அரைமணி நேர பேச்சு வார்த்தைக்குப் பின்னர் அந்த ஆடவரை பொதுமக்களிடம் இருந்து மீட்டனர்.

பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அவர் அனுப்பி வைக்கப் பட்டார். இலுப்பூர், அன்னவாசல் பகுதியில் கடந்த ஒரு வாரமாக பரவிய வதந்தியால் நேற்று முன்தினம் காலை வடமாநில தம்பதியை பொதுமக்கள் பிடித்து இலுப்பூர் போலிசாரிடம் ஒப்படைத்த நிலையில் மாலையில் ஆடவர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.