சேலம்: சேலம் மாவட்டத்தின் தீவட்டிப்பட்டி பகுதியில் கடந்த மே மாதம் நடிகர் மன்சூர் அலிகான் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தபோது, எட்டு வழிச்சாலை அமைத்தால் 8 பேரையாவது வெட்டுவேன் எனக் கூறினார். இது குறித்துத் தீவட்டிப்பட்டி போலிசார் வழக்குப்பதிவு செய்து நடிகர் மன்சூர் அலிகானை சென்னையில் வைத்துக் கைது செய்தனர். இதையடுத்து அவர் சேலத்திற்கு அழைத்து வரப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்- கப்பட்டார். நேற்று முன்தினம் சேலம் மாவட்ட முதன்மை நீதி- மன்றம் அவருக்குப் பிணை வழங்- கியது.
இதையடுத்து சேலம் மத்திய சிறையில் இருந்து மன்சூர் அலிகான் சனிக்கிழமை இரவு விடுதலை செய்யப்பட்டார். சிறை வாசல் முன்பு அவருக்கு நாம் தமிழர் கட்சியினர் வரவேற்பு அளித்தனர். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் மன்சூர் அலிகான். "எட்டு வழிச் சாலைக்கு எதிர்ப்- புத் தெரிவித்ததால் என்னைக் கைது செய்து சிறையில் அடைத்- தனர். எனக்காக சட்டமன்றத்தில் பேசிய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரி- வித்துக் கொள்கிறேன். "தற்போது 40 விழுக்காடு கமி - ஷன் பெறுவதற்காகவே இந்த 8 வழிச்சாலையை அமைக்கிறார்கள்.
8 வழிச்சாலையால் 8 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பைக் கொடுக்கிறேன் என்றோ அல்லது எத்தகைய பசுமைப் புரட்சியை ஏற்படுத்த போகிறோம் என்றோ எடப்பாடிப் பழனிசாமி தெளிவு- படுத்த வேண்டும். "சேலத்தில் இருந்து சென்- னைக்கு ஏற்கெனவே 3 சாலைகள் இருக்கும்போதும் 4வது சாலை எதற்காக அமைக்கிறார்கள்?
நான் கைது செய்யப்பட்ட அன்று காலையில் ரத்ததானம் செய்யலாம் எனப் புறப்பட்டேன். ஆனால், அன்றைய தினம் ஒரு தீவிரவாதியைப் பிடிப்பது போல் பிடித்து என்னைக் கைது செய்- தார்கள். கவிஞர் வைரமுத்துவின் தலையை வெட்டிக்கொண்டு வாருங்கள் எனக் கூறியவர்களை எல்லாம் கைது செய்யவில்லை. மன்சூர் அலிகான் இளிச்சவாயன் என்ப தால் கைது செய்து விட்- டார்கள்.
சேலம் மத்திய சிறையில் இருந்து பிணையில் விடுவிக்கப்பட்ட மன்சூர் அலிகான் செய்தியாளர்களுக்குப் பேட்டி கொடுக்கிறார். படம்: ஊடகம்

