ஆலடியூர்: திறந்தவெளியில் சாயக் கழிவைக்கொட்டி வைத்திருந்த குற்றச்சாட்டில் திருநெல்வேலி மாவட் டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள மதுரா கோட்ஸ் ஆலைக்கு மின் இணைப்பை துண்டித்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். அம்பாசமுத்திரம் தாலுகா ஆலடியூரில் மதுரா கோட்ஸ் நூற்பாலை உள்ளது. இந்த ஆலையில் விக்கிரமசிங்க- புரம், அம்பாசமுத்திரம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் வேலை பார்க்கின்றனர். வியாழக்கிழமை இரவு வழக்கம்போல் இந்த ஆலை இயங்கிக்கொண்டு இருந்தது.
அப்போது ஆலைக்கு வந்த மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், ஆலையின் மின் இணைப்பை துண்டித்தனர். ஜெனரேட்டர் மூலமும் ஆலையை இயக்கக்கூடாது என் றும், மீறி இயக்கினால் ஆலைக்கு 'சீல்' வைக்க நடவடிக்கை எடுக் கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர். மின் இணைப் புத் துண்டிக்கப் பட்டதால் ஆலையின் இயக்கம் நிறுத்தப்பட்டது.

