புனே: புனேவில் உள்ள பிவிஆர் திரையரங்கு ஒன்றில் பாப் கார்ன் உள்ளிட்ட உணவு பொருட்கள் அநியாய விலைக்கு விற்கப்படுவதை எதிர்த்து ராஜ் தாக்கரேவின் நவநிர்மாண் சேனா அமைப்பினர் அந்த தியேட்டர் துணை நிர்வாகியைத் தாக்கினர். அங்கு பாப்கார்ன் 250 ரூபாய்க்கு விற்கப்படு வதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து வினோக் குமார் மாலி, 25, என்னும் அந்த நிர்வாகி தாக்கப்பட்டார். நவநிர் மாண் அமைப்பினர் மாலியின் கன்னத்தில் அறையும் காணொளி சமூக ஊடகங்களில் பரவியது. இச்சம்பவம் தொடர்பாக மாலி கொடுத்த புகாரின் பேரில் போலிசார் வழக்குப் பதிவு செய்து சம்பந்தப்பட்டவர்களைத் தேடி வரு கின்றனர். இதற்கிடையே, விலை அதிகமாக விற்கும் திரை யரங்குகளுக்கு எதிரான தங்களது போராட்டம் தொடரும் என்று நவநிர்மாண் அறிவித்துள்ளது.
பாப்கார்ன் 250 ரூபாய்: திரையரங்க நிர்வாகி கன்னத்தில் 'பளார்'
1 mins read
-

