250 தமிழ்ச் சிறுகதைகளை மலையாளத்தில் மொழிபெயர்த்த கட்டடத் தொழிலாளி

250 தமிழ்ச் சிறுகதைகளை மலையாளத்தில் மொழிபெயர்த்த கட்டடத் தொழிலாளி

1 mins read
1eb46e4b-663c-4bd2-b1e7-6b82c35db8f1
-

திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள ஷஃபி என்பவர் பகலில் கட்டட வேலை பார்க்கிறார். இரவு நேரங்களில் முக்கிய படைப்புகளை மலையாளத்தில் மொழிபெயர்க்கிறார். ஷஃபி செருமாவிலாயி எனப் படும் இவர் தமிழில் முக்கிய எழுத்தாளர்களின் 250க்கும் மேற்பட்ட தமிழ்ச் சிறுகதைகளை யும் 14 தமிழ்ப் புத்தகங்களையும் மலையாளத்தில் மொழி பெயர்த் துள்ளார். தோப்பில் முகமது மீரான், சல்மா, திலகவதி, பாலபாரதி, ஆ. மாதவன், சுப்ரபாரதி மணி யன் போன்ற பல முக்கியமான வர்களின் படைப்புகளை இவர் மொழி பெயர்த்துள்ளார். இத்தனை மொழிபெயர்ப்புகள் செய்திருந்தும் ஒரு கட்டடத் தொழிலாளி என்றுதான் தம்மை அவர் அடையாளம் காட்டிக்கொள் கிறார். கேரளாவின் கன்னூர் மாவட் டத்தைச் சேர்ந்த இவரின் தந்தை மீன் வியாபாரி. மிகுந்த வறுமை யில் இருந்தாலும் படிக்க புத்த கங்கள் மட்டும் எப்படியோ வாங்கி விடுவார் ஷஃபி. தமது பள்ளிப் பருவத்தில் கிராமத்தில் உள்ள பொது நூல கத்தில் இவரது வாசிப்புப் பழக்கம் வளர்ந்துள்ளது.

ஷஃபி. படம்: இந்திய ஊடகம்