கோட்டயம்: கேரளாவில் பெண் ஒருவர் பாவமன்னிப்பு கேட்கச் சென்றபோது ஐந்து பாதிரியார்கள் அவரை மிரட்டி பாலியல் பலாத் காரம் செய்த விவகாரம் நாடெங்கும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத் தியுள்ள நிலையில் தற்போது அதே போல் இன்னொரு சம்பவம் நிகழ்ந் துள்ளது. கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள குருவிலாங்காடில் 'கான்வெண்ட்' பள்ளிக்கூடத்தில் கிறிஸ்தவ பெண் துறவி ஒருவர் பணியாற்றி வருகிறார். அவரை கத்தோலிக்க பிஷப் பிராங்கோ முலக்கால் என்பவர் மிரட்டி பாலி யல் வன்கொடுமை செய்ததாக அந்த துறவி தற்போது போலி சாரிடம் புகார் அளித்துள்ளார்.
2014ம் ஆண்டு விருந்தினர் மாளிகையில் தன்னை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த பிஷப், தொடர்ந்து தம்மை 13 முறை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் இது தொடர்பாக தேவாலய நிர்வாகத்திடம் புகார் அளித்தும் அவர்கள் எந்த நட வடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர் போலிசிடம் அளித்த புகாரில் அந்தப் பெண் குறிப் பிட்டுள்ளார். ஆனால் தம் மீது அடிப்படை ஆதாரம் இல்லாத புகாரை அந்த பெண் துறவி கூறியிருப்பதாக பிஷ்ப்பும் போலிசாரிடம் புகார் அளித்துள்ளார். இந்த பிஷப் ஜலந்தர் நகரைச் சேர்ந்தவர். இருவரிடமும் போலிசார் விசா ரணை செய்து வருகின்றனர்.

