ஆளுநர்: திருக்குறள் அரசியல் தத்துவங்கள் இன்றும் பொருத்தமானவையாக உள்ளன

ஆளுநர்: திருக்குறள் அரசியல் தத்துவங்கள் இன்றும் பொருத்தமானவையாக உள்ளன

2 mins read

சென்னை: திருக்குறளில் கூறப்பட் டுள்ள அரசியல் தத்துவங்கள் இப்போதும் பொருத்தமாக உள்ள தாக ஆளுநர் பன்வாரிலால் புரோ ஹித் தெரிவித்துள்ளார். பாரத பண்பாட்டு மையம் சார் பில், அதன் தலைவரும் தமிழ் வளர்ச்சித் துறை முன்னாள் செய லருமான மூ. இராசாராம் உருவாக் கிய 'குறள் அமுது=ஆயிரத்தில் ஒருவன்' இசை நாட்டிய நாடக நிகழ்ச்சி சென்னையில் சனிக் கிழமை நடந்தது. அதில் ஆளுநர் புரோஹித், இந்திய பண்பாட்டு மையத்தின் இணையத்தளத்தை தொடங்கிவைத்தார்.

பிறகு பேசிய ஆளுநர், ஒரு மனிதன் தன் வாழ்வில் எதிர்கொள்ளும் எல்லா அம்சங்கள் குறித்தும் திருக்குற ளில் கூறப்பட்டுள்ளது என்றார். "நல்லாட்சி, திட்டமிடல், நிதி மற்றும் குடிநீர் மேலாண்மை உள் ளிட்ட பல்வேறு அம்சங்களை அது எடுத்துரைக்கிறது. "திருக்குறள் குறைந்த சொற் களில், அதிக அறிவைப் புகட்டு கிறது. 2000 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட திருக்குறளில் திருவள்ளுவர் கூறியுள்ள அரசியல் தத்துவங்கள் இன்றைய காலகட்டத்துக்கும் பொருத்தமாக உள்ளன," என்றார் ஆளுநர்.

புதிதாக தொடங்கப்பட்டுள்ள இந்திய பண்பாட்டு மைய இணை யத்தளத்தின் மூலம் தமிழின் பெருமை உலகம் முழுவதும் பரவ வாய்ப்பு கிடைக்கும் என்றும் தமிழ் ஓர் இனிமையான மொழி என்ப தால் தமிழைக் கற்க, தான் விரும்பு வதாகவும் ஆளுநர் தன் உரையில் குறிப்பிட்டார். அதனைத் தொடர்ந்து மூ.இரா சாராம் எழுதிய 'பகவத்கீதையில் வெற்றியின் ரகசியம்' என்ற நூலை ஆளுநர் வெளியிட, இந்தி யாவுக்கான ஜப்பான் நாட்டு தூதர் கோஜிரோ உசியாமா அதைப் பெற்றுக்கொண்டார்.