தமிழகத்துக்கு 31 டிஎம்சி தண்ணீர்: காவிரி மேலாண்மை ஆணையம் முதல் உத்தரவு

தமிழகத்துக்கு 31 டிஎம்சி தண்ணீர்: காவிரி மேலாண்மை ஆணையம் முதல் உத்தரவு

1 mins read

புதுடெல்லி: காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கட்டம் டெல்லியில் நேற்று காலை நடை பெற்றது. அப்போது தமிழகத்துக்கு 31 டிஎம்சி தண்ணீரைத் திறந்துவிட வேண்டும் என உத்தரவிடப்பட்டது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து காவிரி மேலாண்மை ஆணையத்தை அண்மையில் அமைத்தது மத்திய அரசு. இதில் மத்திய அரசு, தமிழக, கர்நாடக மாநில அரசுகளின் பிரதிநிதிகள் இடம்பெற்றுள்ளனர். இந்த ஆணையத்தின் முதல் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழக அரசின் சார்பில் ஆணைய உறுப்பி னராக இடம்பெற்றுள்ள தமிழகப் பொதுப்பணித் துறை முதன்மைச் செயலர் எஸ்.கே. பிரபாகரன் பங்கேற்றார். இதேபோல் புதுவை, கர்நாடகா, கேரள மாநிலப் பிரதிநிதிகளும் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்கள் தரப்புக் கருத்துகளையும் கோரிக்கைகளையும் முன்வைத்த னர். காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக ஆலோசனை நடை பெற்றது. இதையடுத்து ஜூலை மாதப் பங்காக தமிழகத்துக்குக் காவிரி யில் இருந்து 31 டிஎம்சி தண்ணீரைத் திறக்க வேண்டும் என மேலாண்மை ஆணையத்தின் தலைவர் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டார்.