மாடுகளை வைத்து நூதனப் போராட்டம்

மாடுகளை வைத்து நூதனப் போராட்டம்

1 mins read
9bf351c6-8031-48ce-a220-b34785746e2a
-

பசுமை வழிச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம், குள்ளம்பட்டி கிராம விவசாயிகள் கால் நடைகளுடன் அம்மன் கோவிலுக்குச் சென்று நூதனப் போராட்டத் தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. மாடுகளின் கொம்பின் அடிப்பகுதியில் கறுப்பு துணியைச் சுற்றி, அதன்மீது 'எட்டு வழிச்சாலை திட்டம் வேண்டாம்' என்ற அட்டைகளைத் தொங்க விட்டிருந்த னர். அம்மனுக்கு பூசை செய்த பின் மாடுகளு டன் ஊர்வலம் சென்றனர். படம்: தகவல் ஊடகம்