தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு

தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு

1 mins read

ராமேசுவரம்: இலங்கைக் கடற்படையினர் நடுக்கடலில் விரட்டி அடித்ததால் ராமேசுவரம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்காமல் கரை திரும்பி உள்ளனர். இரு தினங்களுக்கு முன்பு ராமேசுவரத்தில் இருந்து 750 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். இந்திய, இலங்கை கடல் எல்லையில் மீன்பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென 5 படகுகளில் அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் தங்களை விரட்டி அடித்ததாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். கைது நடவடிக்கைக்கு பயந்து மீன்பிடிக்காமலேயே கரை திரும்பியதாகவும், இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறி உள்ளனர்.