விடிய விடிய மழை: சேலத்தில் வீடுகளுக்குள் புகுந்த மழை நீர்

விடிய விடிய மழை: சேலத்தில் வீடுகளுக்குள் புகுந்த மழை நீர்

1 mins read

சேலம்: விடிய விடிய பெய்த கனமழையின் காரணமாக சேலத்தில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக மாறின. வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டனர். நேற்று முன்தினம் இரவு சேலத்தில் தொடர்ந்து மூன்று மணி நேரம் மழை வெளுத்துக் கட்டியது. இதனால் அம்மாபேட்டை, கிச்சிபாளையம் உள்ளிட்ட இடங்களில் தாழ்வான இடங்களில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்தது. மழைநீருடன் கழிவுநீரும் கலந்துவிட்டதால் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகினர். வீட்டுக்குள் புகுந்த மழைநீரில் மூழ்கி சன்னியாசிகுண்டு பகுதியைச் சேர்ந்த புஷ்பா என்ற பெண்மணி உயிரிழந்தார். சேலம் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்த நிலையில், அங்கு 36.28 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.