தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

'இந்தியாவில் தமிழ்நாட்டு மருத்துவ முறையே தலைசிறந்தது, முன்மாதிரி'

1 mins read

இந்தியாவில் நோயைக் கண்டறிந்து அதைக் குணப்படுத்த சரியான சிகிச்சை அளிப்பதில் தமிழ்நாடுதான் நாட்டிற்கே முன்மாதிரியாகத் திகழ்கிறது என்று அந்த மாநிலத்தின் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மருத்துவர்கள் மன்றம் சார்பில் நடந்த ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், பொது சுகாதார சட்டத்தை இயற் றிய முதல் மாநிலம் தமிழ்நாடுதான் என் றும் குறிப்பிட்டார்.

சென்னையில் உள்ள அரசு பொது மருத்துவமனையும் அரசு கண் மருத்துவ மனையும் ஆசியாவிலேயே மிகவும் பழமை வாய்ந்தது என்பதை அவர் சுட்டினார். தமிழ்நாட்டில் பல்வேறு மருத்துவ துறைகளில் சிறந்து விளங்கும் பிரபலமான மருத்துவர்கள் இருக்கிறார்கள் என்றார் அவர். அந்த மாநிலத்தில் குழந்தை மற்றும் மகப்பேறு இறப்பு விகிதம் சாதனை அளவில் குறைந்திருப்பதையும் குழந்தை களுக்குத் தடுப்பு மருந்து கொடுப்பதில் முதலாவது மாநிலமாக தமிழ்நாடு திகழ் வதையும் அவர் பெருமையாகக் கூறினார்.

இருந்தாலும் இந்தியா முழுவதும் உள்ளது போல தமிழ்நாட்டிலும் மருத்துவர் களின் எண்ணிக்கை போதவில்லை என் றார் அவர். பயிற்சி பெற்ற மருத்துவர் களை உருவாக்கி அவர்கள் கிராமப் புறங் களில் பணி செய்ய ஊக்குவிக்க வேண் டும் என்று குறிப்பிட்ட ஆளுநர், அந்த மாநிலத்தில் அமையவிருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவத் துறையில் பெரும் சாதனை படைக்கும் என்றார். நிகழ்ச்சியில் 11 தலைசிறந்த மருத்துவர் களுக்கு ஆளுநர் விருது வழங்கி சிறப் பித்தார்.