சீர்திருத்தம் அல்ல; சீரழிவு: அன்புமணி கடும் விமர்சனம்

சீர்திருத்தம் அல்ல; சீரழிவு: அன்புமணி கடும் விமர்சனம்

1 mins read

சென்னை: பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு மாற்றாக புதிய அமைப்பை ஏற்படுத்துவது மிகப்பெரிய நிர்வாக மாற்றம் என்றும் இதுகுறித்துக் கருத்துத் தெரிவிக்க 10 நாட்கள் மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டுள்ளது போதுமானதல்ல என்றும் அன்பு மணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். உயர்கல்வி ஆணையம் அமைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பான மசோதாவை உடனடி யாக நிறைவேற்ற மத்திய அரசு துடிப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர் இந்த விசயத்தில் எவரது கருத்துக்கும் மதிப்பளிக்காமல் மத்திய அரசு செயல்படுவதாகச் சாடியுள்ளார்.

"பல்கலைக்கழக மானியக் குழுவுக்குப் பதிலாக உயர்கல்வி ஆணையத்தை அமைப்பது என்பது சீர்திருத்தமாக இருக் காது. சீரழிவாகவே இருக்கும். இந்தப் புதிய அமைப்பானது மத்திய ஆட்சியாளர்களின் கைப்பாவையாகவே செயல் படும். இவ்வாறு இருந்தால் உயர்கல்வியின் தரம் எந்த வகையிலும் உயராது," என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.