சென்னை: தமிழக ஆளுநரின் நடவடிக்கைகள் மாநில உரிமை களைப் பறிப்பதாக உள்ளது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சாடியுள்ளார். இது தொடர்பாக வெளியிட் டுள்ள அறிக்கையில் தமிழகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை அவமதிப்பது போல் ஆளுநரின் செயல்பாடுகள் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். "இதன் காரணமாகவே ஆளு நருக்கு அறவழியில் எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படு கிறது. ஆனால், போராட்டங்களை நசுக்கும் விதமாக அதில் ஈடுபடுவோரைக் கைது செய்து சிறையில் அடைப்பது அவசரநிலை காலத்தை நினைவூட்டுகிறது. "இந்தியத் தண்டனைச் சட்டத்தை அரசியல் கட்சிக ளுக்குச் சுட்டிக்காட்டும் ஆளுநர், அரசியல் அமைப்புச் சட்டத்தைக் கற்க வேண்டும். அதை மதித்து நடக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்," என்று திருமா வளவன் தெரிவித்துள்ளார்.
திருமாவளவன். படம்: ஊடகம்

