சேலம்: கடந்த இரு தினங்களாகப் பெய்து வரும் கனமழை சேலத்தைப் புரட்டிப் போட்டுள்ளது. கடந்த 56 ஆண்டுகளுக்குப் பிறகு அங்கு ஒரே நாளில் 13.38 செ.மீ. மழை பெய்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் சேலத்தில் மழை வெளுத்துக் கட்டுகிறது. அன்றிரவு 5 மணி நேரம் கொட்டித் தீர்த்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. மேலும் தாழ்வான சில குடி யிருப்புகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்க ளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
ஏரியில் மூழ்கி ஒரு பெண்மணி பலியானார். இந்நிலையில் திங்கட்கிழமை யும் சேலத்தில் கனமழை நீடித்தது. இடி மின்னலுடன் பல மணி நேரம் நீடித்த கன மழை கார ணமாகத் திருமணி முத்தாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தது. நீர்வழிப் பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் காரணமாகப் பல இடங்களில் மழைநீர் திசை மாறி குடியிருப்புப் பகுதிகளைச் சூழ்ந்தது. பல இடங்களில் மரங் கள் வேரோடு சாய்ந்தன. மின் கம்பங்களும் சரிந்தன. மொத்தம் 1500 வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததாகத் தகவல்கள் தெரிவிக் கின்றன. பல சிரமங்களை எதிர் கொண்டாலும், 56 ஆண்டுக ளுக்குப் பிறகு கொட்டித் தீர்த்த மழையால் சேலம் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

