சென்னையில் தலைமைக் காவலரை கத்தியால் சரமாரியாக வெட்டிய ரவுடிகள்

சென்னையில் தலைமைக் காவலரை கத்தியால் சரமாரியாக வெட்டிய ரவுடிகள்

2 mins read

சென்னை: ரவுடிகள் சிலர் ஒன்று சேர்ந்து தலைமைக் காவலரைக் கத்தியால் சரமாரியாக வெட்டிய சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராயப்பேட்டை காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் தலைமைக் காவலர் ராஜவேலு (வயது 35) நேற்று முன்தினம் இரவு சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்தார். சுமார் 10 மணி அளவில் லாயிட்ஸ் சாலை அருகே ரவுடிகள் சிலர் பெண்களைக் கேலி செய்து தகராற்றில் ஈடுபடுவ தாகக் கிடைத்த தகவலை அடுத்து அவர் அங்கு சென்றுள்ளார்.

குறிப்பிட்ட இடத்தில் ரவுடிகள் ஒன்றாக அமர்ந்து மது அருந்துவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ராஜவேலு, உடனடியாகக் கலைந்து செல்லுமாறு அவர்களை எச்சரித்ததாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த ரவுடிகள் தனியாக வந்த ராஜவேலுவைச் சரமாரியாகத் தாக்கத் தொடங்கினர். ஒரு ரவுடி ராஜவேலுவின் தலையில் 16 முறை வெட்டியதாகத் தெரிகிறது. இதனால் நிலைகுலைந்து போன ராஜவேலுவை மற்ற ரவுடிக ளும் அடித்து உதைத்துள்ளனர். எப்படியோ அந்தக் கும்பலிடம் இருந்து தப்பித்த அவர், சாலையில் சென்ற ஓர் ஆட்டோவில் ஏறித் தம்மை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு ஓட்டு நரிடம் கூறிவிட்டு மயங்கி விழுந்தார்.

அவருக்குத் தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகி றது. இந்நிலையில் தலைமைக் காவலரை வெட்டிய ரவுடிகளில் 6 பேரைப் போலிசார் கைது செய்துள்ளனர். மேலும் 4 பேருக்கு வலை வீசப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த சில தினங்களாக சுற்றுக்காவல் பணியில் ஈடுபடும் காவலர்களைத் தாக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்