மும்பை: மும்பையில் பெரும் விபத்தை தடுத்த ரயில் ஓட்டு நரைப் பாராட்டி மத்திய அரசு ரூ.5 லட்சம் பரிசு அறிவித் துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் திங்களன்று மும்பை அந்தேரி பகுதியில் உள்ள மேம்பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதனால், அதன்கீழே உள்ள ரயில் பாதையில் மின்னழுத்த கம்பிகள் அறுந்து விழுந்து ஆபத்தான நிலை ஏற்பட்டது. இச்சூழலில் அந்தேரி ரயில் நிலையத்திலிருந்து வந்த பயணிகள் ரயிலை ஓட்டுநர் சந்திரசேகர் சர்வானந்த் உடனே நிறுத்தி பெரும் விபத்தைத் தவிர்த்தார். நூற்றுக்கணக்கான பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய அவரது செயலைப் பாராட்டி ரூ.5 லட்சம் பரிசளிப்பதாக ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்துள்ளார்.
ரயில் ஓட்டுநருக்கு ரூ.5 லட்சம் பரிசு
1 mins read

