துணை நிலை ஆளுநருக்குத் தனி அதிகாரம் கிடையாது என் றும் அவர் தன்னிச்சையாகச் செயல்பட அரசமைப்புச் சட்டத் தில் இடமில்லை என்றும் இந்தி யாவின் உச்ச நீதிமன்றம் தெரி வித்துள்ளது. மாநில ஆட்சி நிர்வாகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர், மத்திய அரசாங் கத்தால் நியமிக்கப்பட்ட ஆளுநர் =இந்த இருவரில் யாருக்கு அதி காரம் உள்ளது என்னும் சர்ச் சைக்குரிய வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கி உச்ச நீதிமன்றம் இவ்வாறு குறிப்பிட்டது. இந்தத் தீர்ப்பின் மூலம் யூனி யன் பிரதேசமான புதுடெல்லியில் ஆட்சி புரியும் அரவிந்த் கெஜ்ரி வாலின் ஆம் ஆத்மி அரசாங் கத்துக்கும் துணை நிலை ஆளுநருக்கும் இடையில் நீண்ட காலமாக நீடித்து வந்த அதிகாரப் போட்டிக்கு ஒரு முடிவு கிட்டி உள்ளது. மேலும் துணை நிலை ஆளுநர் பதவியில் உள்ள புதுச்சேரி போன்ற மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கும் இந்தத் தீர்ப்பு நிம்மதியை வழங்கி உள் ளது.
ஏற்கெனவே நிலவி வந்த பூசலுக்கு விடை காண டெல்லி உயர் நீதிமன்றத்தை ஆம் ஆத்மி நாடியது. ஆனால் டெல்லி யூனி யன் பிரதேசம் என்பதால் நிர் வாகத்தில் துணை நிலை ஆளு நருக்கு அதிகாரம் உள்ளது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதனை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் ஆம் ஆத்மி மேல் முறையீடு செய்தது. அந்த வழக்கை விசாரித்து வந்த உச்ச நீதிமன்ற தலைமை நிதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் ஐந்து நீதி பதிகள் அடங்கிய அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது. "டெல்லி அமைச்சரவை எடுக்கும் முடிவுகளையும் பரிந்துரைகளையும் துணை நிலை ஆளுநர் ஏற்று ஒப்புதல் வழங்க வேண்டும்.
அவற்றுக்கு முட்டுக்கட்டை போடக்கூடாது. தனிப்பட்ட கருத்து வேறுபாடுகளால் அரசாங்கத்தின் முடிவுகளில் தாமதம் ஏற்படக் கூடாது. மற்ற மாநிலங்களைப் போல டெல்லிக்கு முழு அதிகாரம் இல்லையென்றாலும் தேர்ந்தெடுக் கப்பட்ட அரசின் ஆலோசனையு டன்தான் துணை நிலை ஆளுநர் செயல்பட முடியும். குறிப்பிட்ட சில துறைகளைத் தவிர மற்ற வற்றுக்கு துணை நிலை ஆளு நரின் ஆலேசனை இன்றி டெல்லி அரசு செயல்பட முடியும்," என தீர்ப்பில் மேலும் கூறப்பட்டு உள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் கள் பலரும் இந்தத் தீர்ப்பை வரவேற்று உள்ளனர்.

