சென்னை: தமிழகத்தில் தொழில் வளர்ச்சியை மேம் படுத்த பல்வேறு நடவடிக்கை களை மேற்கொண்டு வருவ தாக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தொழில் முனைவோர் மற்றும் பெரும் முதலீட்டாளர்களை ஈர்ப்பதில் தமிழகம் எப்போதும் முன்னிலை வகித்து வருவ தாக அந்தச் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. "காஞ்சிபுரம், மதுரமங்கலம் கிராமத்தில் பெருந்தொழில் நிறுவனங்களில் ஒன்றான சியட் நிறுவனம், டயர் மற்றும் அது சார்ந்த பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலை அமைத்து, 10 ஆண்டு காலத் திற்குள் ரூ.4 ஆயிரம் கோடி முதலீடு செய்து, ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பை அளிக்க உள்ளது," என அரசு தெரிவித்துள்ளது.
ரூ.4 ஆயிரம் கோடியில் புதிய தொழிற்சாலை
1 mins read

