தமிழகத்தை சுரண்டுகின்றனர்: தினகரன் பகிரங்க குற்றச்சாட்டு

தமிழகத்தை சுரண்டுகின்றனர்: தினகரன் பகிரங்க குற்றச்சாட்டு

1 mins read
86f8b384-2f2e-4bdc-99b4-7c278e020830
-

நாமக்கல்: கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தமிழகத்தைப் பலரும் சுரண்டியுள்ளதாக அமமுக பொதுச்செயலர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அவ்வாறு சுரண்டியவர்களிடம் தற்போது வருமான வரிச்சோதனை நடப்பதாகத் தகவல் வந்துள்ளது என நாமக்கல்லில் செய்தியாளர்க ளிடம் பேசுகையில் அவர் குறிப் பிட்டார். தமிழகத்தில் இரண்டு பக்க மும் கொள்ளையடித்தவர்கள் யார் யார்? என்பது ஊடகங்களுக்கு நன்கு தெரியும் என்று தெரிவித்த அவர், கொள்ளையடித்தவர்களின் பினாமிகளிடம் தான் சோதனை நடந்து வருகிறது என்றார். "2019ஆம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும். அதற்குள் தமிழகத்திலும் தேர்தல் வர வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.

"மக்களுக்கு எதிரான இந்த ஆட்சி விரைவில் முடிவுக்கு வரவேண்டும் என்பதே மக்களின் விருப்பம். மீண்டும் ஜெயலலிதா வின் ஆட்சி அமமுக தலைமையில் அமைய வேண்டும். அப்போதுதான் ஏழை எளிய மக்கள், விவசாயிகள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள், மீனவர்கள் போன்ற சமுதாயத்தின் பல்வேறு பிரிவினர் பயன்பெறுவர்," என்றார் தினகரன். பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவின் தமிழக வருகையால் அரசியல் நிலவரங்களில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்படுமா என்பது தமக்குத் தெரியாது என்று குறிப்பிட்ட அவர், 18 எம்எல்ஏக்கள் வழக்கு நீதிமன்றத்தின் மூலம் வெற்றி பெறுவது உறுதி என்றார். 2018-07-06 06:00:00 +0800