பெங்களூரு: கர்நாடகாவில் இரண்டு லட்ச ரூபாய் வரை விவசாயிகள் வாங்கியுள்ள கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்து பேசிய முதல்வர் குமாரசாமி(படத்தில் பெட்டியுடன்) கூறினார். "இரண்டு லட்ச ரூபாய்க்குள் வாங்கப்பட்ட விவசாயக் கடன்கள் இந்த அறிவிப்பு மூலம் ரத்து செய்யப்படும். இதனால் அரசுக்கு 34,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும். எந்தெந்த விவசாயிகள் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தினார்களோ, அந்தத் தொகை திரும்ப அவர்களுக்கே கொடுக்கப்படும். அதிகபட்சம் ரூ.25,000 வரை இதன்படி திரும்பக் கொடுக்கப்படும்," என்று தெரிவித்தார்.
விவசாயக் கடன்களை ரத்து செய்தது கர்நாடகா
1 mins read
-

