வழிச் சாலை: தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு

வழிச் சாலை: தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு

1 mins read
53e51722-9da1-4b38-b5f4-dcb53b10b8fa
-

சென்னை: சேலம்-சென்னை எட்டு வழி பசுமைச் சாலைத் திட்டத்திற்கு தடைவிதிக்க சென்னை உயர் நீதி மன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. சேலம்=சென்னை எட்டு வழிச் சாலைத் திட்டம் சேலம், தருமபுரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் வழியாக அமையவுள்ளது. தற்போது நிலம் கையகப்படுத் தும் பணி நடைபெற்று வருகிறது. இத்திட்டத்திற்கு அப்பகுதி விவ சாயிகளும் பொதுமக்களும் கடு மையாக எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தருமபுரி மாவட் டம் பாப்பிரெட்டிபட்டி பகுதியில் நிலத்தை கையகப்படுத்தும் பணிக் காக மாவட்ட வருவாய் அதிகாரி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி பி.வி.கிருஷ்ண மூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி கல்யாணசுந்தரம் முன்பாக நேற்று நடைபெற்றது. அப்போது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் சக்திவேல் முன்னிலையாகி, "எட்டு வழிச் சாலை தொடர்பாக அரசு அதிகாரி பிறப்பித்துள்ள உத்தரவு தன்னிச்சையானது.

நிலங்களை அளவெடுக்க வந்த அதிகாரிகளை எதிர்த்துப் போராடிய கிராமத்தினர். படம்: தமிழக ஊடகம்