நாராயணசாமி: கிரண்பேடி கருத்து கூறலாம், உத்தரவு பிறப்பிக்கக் கூடாது

நாராயணசாமி: கிரண்பேடி கருத்து கூறலாம், உத்தரவு பிறப்பிக்கக் கூடாது

1 mins read

புதுச்சேரி: உச்ச நீதிமன்ற தீர்ப்பை கிரண் பேடி மதித்து நடக்காவிட்டால் நீதிமன்றத்தை அணுக நேரிடும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். நேற்று சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நாராயணசாமி, "துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பிரச்சினைகள் குறித்து அமைச்சர்களிடம் தெரிவிக்க வேண்டுமே தவிர உத்தரவுகளைப் பிறப்பிக்கக் கூடாது எனத் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் தேவைப்பட்டால் நீதிமன்றத்தை அணுகத் தயாராக இருப்பதாகவும்," அவர் கூறினார்.