பாட்னா: தனியார் பள்ளி ஒன்றில் 10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலி யல் தொல்லை கொடுத்த மாண வர்களும் ஆசிரியர்களும் கைதாகி னர். இக்கொடுமையைத் தாங்க முடியாத 14 வயது மாணவி, போலிசில் புகார் அளித்துள்ளார். இது குறித்துக் காவல்துறை தரப்பில், "பள்ளி தலைமை ஆசிரி யர் உதய் குமார் சிங், ஆசிரியர் பாலாஜி மற்றும் இரண்டு மாணவர் கள் கைது செய்யப்பட்டுள்ளனர். "மற்ற 14 குற்றவாளிகளும் தலைமறைவாகிவிட்டனர். அவர் களைத் தேடி வருகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
"கடந்த டிசம்பர் மாதம், அந்த மாணவியை 5 மாணவர்கள் சேர்ந்து பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். அதனை ஒரு மாணவன் படம்பிடித்துள்ளான். இதனை வெளியே சொன்னால் காணொளியை வெளியிட்டு விடு வோம் என்று கூறி மிரட்டியுள்ளனர். "இந்தச் சம்பவம் பள்ளித் தலைமை ஆசிரியருக்குத் தெரிய வர அவரும் மேலும் 2 ஆசிரியர் களும் மாணவர்களுடன் சேர்ந்து கடந்த 7 மாத காலமாக மாண வியை வன்புணர்வு செய்து வந்து உள்ளனர். இது குறித்த தனது தந்தை யிடம் அம்மாணவி கூறியதை அடுத்து, அவர்கள் பள்ளிக்குச் சென்று வாக்குவாதம் செய்துள்ள னர். அவர்கள் அங்கிருந்து வெளி யேற்றப்பட்டதை அடுத்து, போலி சில் புகார் அளித்தனர்.

