டாக்சி ஓட்டுநரின் கடத்தல் முயற்சி; சமயோசிதமாகத் தப்பிய பெண்

டாக்சி ஓட்டுநரின் கடத்தல் முயற்சி; சமயோசிதமாகத் தப்பிய பெண்

2 mins read

பெங்களூரு: விமான நிலையத் திற்குச் செல்ல இருந்த பெண் பயணியைக் கடத்திச் செல்ல முற்பட்ட பெங்களூரு 'ஓலா' வாடகை டாக்ஸி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். சுரேஷ் 28, பெங்களூருவின் பனாஸ்வாடி பகுதியில் வசித்து வருபவர். கெம்பகவுடா அனைத் துலக விமான நிலையத்தில் இறக் கிவிடுவதற்காக பனாஸ்வாடியில் இருந்து ஒரு பெண் பயணியைத் தனது டாக்சியில் ஏற்றிக்கொண்டு வந்தார். விமான நிலையம் நெருங்கு வதற்கு முன்னுள்ள சுங்கச்சாவடி பகுதியை டாக்சி நெருங்கிக் கொண்டிருந்தபோது, ஓட்டுநர் திடீரென்று தனது வாகனத்தை ஹைதராபாத் சாலை நோக்கித் திருப்பினார்.

பாதை மாறிச் செல்வதால் சந் தேகமடைந்த பெண் அவரிடம் வினவியுள்ளார். அப்போது டாக்சி ஓட்டுநர் அவரை அவமானப்படுத்தி யதோடு அமைதியாக இருக்கும்படி மிரட்டியுள்ளார். அப்போது சமயோசிதமாக செயல்பட்ட அப்பெண், வாகனம் சுங்கச்சாவடியைக் கடந்து செல் லும்போது தனது எச்சரிக்கை அலாரத்தின் சத்தத்தை அதிகப் படுத்தினார். இதைக் கவனித்த சுங்கச்சாவடி ஊழியர், வண்டியை நிறுத்தி அப் பெண்ணை மீட்டார். ஓட்டுநர் சுரேஷ் போலிசில் ஒப்படைக்கப்பட் டார்.

அப்போது சுரேஷ் குடி போதை யில் இருப்பது தெரியவந்தது. அவர் மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது. எனினும் கைது செய் யப்பட்டவரிடம் இன்னும் விசா ரணை மேற்கொள்ளப்படவில்லை. ஓலா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் இதுகுறித்துத் தெரி விக்கையில், "எங்கள் நிறுவனத் திலிருந்து அவரது கார் நீக்கப் பட்டுவிட்டது. இச்சம்பவத்தால் நாங்கள் மிகவும் கவலையடைந்து உள்ளோம். விசாரணையின்போது காவல்துறையினருக்கு நாங்கள் தொடர்ந்து உதவி செய்து வருகி றோம்," என்றார்.