நிகழ்ச்சி நெறியாளர் மீது வழக்கு

நிகழ்ச்சி நெறியாளர் மீது வழக்கு

1 mins read

திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள மாத்ருபூமி தொலைக்காட்சியில் அண்மையில் நடந்த விவாதத்தில் நிகழ்ச்சியை நடத்திய நெறியாளர் வேணு பாலகிருஷ்ணன், முதல்வர் குறித்தும் குறிப்பிட்ட சமயத்தவர் குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேசியதாகக் கூறப்படுகிறது. இந்த விவாதத்தில் கலந்துகொண்ட மார்க்சிஸ்ட் கட்சி இளைஞரணி நிர்வாகி அளித்த புகாரின் அடிப்படையில் வேணு பாலகிருஷ்ணன் மீது வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசியதாக கொல்லம் நகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.