தாய்மொழியைக் காக்க வேண்டும் - துணை அதிபர் வெங்கையா நாயுடு

1 mins read
75ef034a-2b97-4751-957e-982e69890e17
-

சென்னை: இளையர்கள் தங்கள் தாய்மொழியை மறந்து வருவதும் நாட்டில் சில மொழிகள் அழிந்து வருவதும் வேதனை அளிப்பதாகத் துணை அதிபர் வெங்கையா நாயுடு வேதனை தெரிவித்துள்ளார். இளையர்கள் தாய்மொழியைக் காக்க முன்வர வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். "இளையர்கள் தாய்மொழியை மறந்து வருகின்றனர். இதைத் தவிர்க்க ஒவ்வொருவரும் தங்கள் தாய்மொழியில் பேச வேண்டும். "இந்தியாவை உலகமே கண்காணித்துக் கொண்டிருக்கிறது. அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியா உலகளவில் பொருளாதாரத் தில் முன்னேறிய நாடுகளின் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடிக்க வாய்ப்புள்ளது," என்றார் வெங்கையா நாயுடு.