கோவையில் உலகத் தமிழ் இணைய மாநாடு

கோவையில் உலகத் தமிழ் இணைய மாநாடு

2 mins read

கோவை: 17ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு கோவையில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஏராளமான கணினி ஆர்வலர்கள் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசிய தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறைச் செயலர் உதயசந்திரன், கணினியின் முக்கியத்துவத்தை அடுத்த தலை முறையினருக்குக் கொண்டு செல் லும் வகையில் பள்ளி மாணவர் களுக்கான புதிய பாடத் திட்டத்தில் அதற்கு முக்கியத்துவம் அளிக்கப் பட்டுள்ளது," என்றார். பாடத்திட்டங்களில் 2895 'க்யூஆர்' குறியீடுகள் கொடுக்கப் பட்டுள்ளதாகவும் அவற்றை 2 லட்சம் மாணவர்கள் பயன்படுத்தி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். "அடுத்த நூற்றாண்டில் தமிழின் வளமை, இருப்பு ஆகி யவை குறித்து சிந்திக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

தமிழ் மின் நூல், மின்னிதழ் ஆகியவை இல்லாமல் தமிழுக்கான இடம் குறித்து நாம் யோசிக்க வேண்டும். "தமிழுக்கென்று தனிப் பல்கலைக்கழகம், தமிழ் இணையப் பல்கலைக்கழகம் ஆகியவை உள்ளன. இவற்றின் மூலம் இணையத்தில் தமிழில் 60 லட்சம் பக்கங்களைப் பார்வையிட முடியும். ஏறத்தாழ 25,000 நூல்கள் பதி வேற்றம் செய்யப்பட்டுள்ளன," என்றார் உதயசந்திரன். இந்த விவரங்கள் பலருக்கும் தெரியாது என்று குறிப்பிட்ட அவர், தமிழகத்தின் செயல்பாடு களைக் கண்டு ஒடிசாவிலும் மொழியை வளர்க்க ஓர் அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரி வித்தார்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், உத்தமம் அமைப்பு, தமிழக அரசின் மாநிலத் திட்டக்குழு ஆகியவை இணைந்து 17ஆவது உலகத் தமிழ் இணைய மாநாட்டைக் கோவையில் நடத்து கின்றன. இன்று மாலை மாநாடு நிறைவடைய உள்ளது. இம்முறை ஏராளமான, பய னுள்ள பல்வேறு ஆய்வுக் கட்டுரைகள் வாசிக்கப்பட்டதாக மாநாட்டுப் பங்கேற்பாளர்கள் தெரிவித்தனர்.