சிறையில் கௌதமனைச் சந்தித்த பாரதிராஜா

சிறையில் கௌதமனைச் சந்தித்த பாரதிராஜா

1 mins read

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட திரைப் பட இயக்குநர் வ.கௌதமன் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுப் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை புழல் சிறைக்கு வந்த திரைப்பட இயக்குநர் பாரதி ராஜா கௌதமனை சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர் களிடம் பேசிய பாரதிராஜா, "ஜன நாயக நாட்டில் வாய் திறந்தாலே குற்றம் ஆகி விடுகிறது. இதற்கு விரைவில் முடிவு ஏற்படும்," என்று சொன்னார்.