எம்எல்ஏக்களுக்கு ஆதரவாகத் தீர்ப்பு: நீதிபதிக்கு கொலை மிரட்டல்

எம்எல்ஏக்களுக்கு ஆதரவாகத் தீர்ப்பு: நீதிபதிக்கு கொலை மிரட்டல்

1 mins read

சென்னை: அதிமுகவைச் சேர்ந்த 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கில் சபாநாயகருக்கு எதிராகத் தீர்ப்பளித்த நீதிபதிக்குக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கைத் தலைமை நீதிபதியை உள்ளடக்கிய அமர்வு விசாரித்தது. விசாரணையின் முடிவில் சபாநாயகருக்குச் சாதகமாக தலைமை நீதிபதியும், எம்எல்ஏக்களுக்கு ஆதரவாக நீதிபதி சுந்தரும் தீர்ப்பளித்தனர். இந்நிலையில் நீதிபதி சுந்தருக்கு மர்ம நபர்கள் சிலர் கொலை மிரட்டல் விடுத்திருப்பதாகச் செய்தி வெளியாகி உள்ளது. கைபேசியில் அவரைத் தொடர்பு கொண்ட அந்நபர்கள் 18 எம்எல்ஏக்களுக்குச் சாதகமாக எவ்வாறு தீர்ப்பு வழங்கலாம் என்று கேள்வி எழுப்பி மிரட்டி உள்ளனர். இதையடுத்து சுந்தருக்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.