சென்னை: மு.க.அழகிரியின் எதிர்ப்பைச் சமாளிக்கும் வகை யில் கட்சியில் சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதற்கட்டமாக திமுக மாநி லங்களவை உறுப்பினர் கனி மொழிக்கு அக்கட்சியின் தென் மண்டல அமைப்புச் செயலர் பத வியை அளிக்க ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாகத் தமிழக ஊடகம் தெரிவித்துள்ளது. திமுகவிலிருந்து நீக்கப்பட்ட அழகிரி தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியுள்ளார். எனி னும் அவ்வப்போது அரசியல் நிலவரம் குறித்து அதிரடியாக கருத்துத் தெரிவித்து வருகிறார்.
குறிப்பாக மு.க. ஸ்டாலின் குறித்து அவர் விமர்சிக்கத் தவறு வதில்லை. அண்மையில் தஞ்சையில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ஸ்டாலின், தமது பதவியை யாரா லும் தட்டிப் பறித்துவிட முடியாது என சவால் விட்டார். இந்நிலையில் அண்மையில் மதுரையில் நடைபெற்ற திருமண விழாவில் ஸ்டாலினுக்குப் பதிலடி கொடுத்தார் அழகிரி. மு.க. ஸ்டாலின் செயல்படாத தலைவர் என அவர் விமர்சித்தார். இது ஸ்டாலின் தரப்புக்குக் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளதாகத் தெரிகிறது. அவர் அழகிரிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்க முடிவு செய்திருப்பதாக வும் கூறப்படுகிறது. தனது லண்டன் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பியதும் சில அதிரடி நடவ டிக்கைகளை மேற்கொள்ள இருக் கிறார் ஸ்டாலின். அந்த வகையில் கனிமொழிக்கு திமுகவில் தென்மண்டலச் செயலர் பதவியை வழங்குவது குறித்து அவர் தனது குடும்பத்தாரிடமும் கட்சியின் மூத்த நிர்வாகிகளிடமும் ஆலோ சனை நடத்தி இருப்பதாகத் தமிழக ஊடகம் தெரிவித்துள்ளது.

