நாகை: தமிழகம் முழுவதும் ரூ.328.95 கோடி மதிப்பீட்டில் குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இப்பணிகளைக் கண்காணிக்க 7 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். முதற்கட்டமாக நூறு கோடி ரூபாய் செலவில் 1,513 ஏரிகளில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிட்டுள்ள தமிழக அரசு, அடுத்தகட்டமாக 1,511 ஏரிகளில் குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. வட கிழக்குப் பருவ மழை தொடங்குவதற்குள் அனைத்து ஏரிகளி லும் இந்தப் பணிகளை முடிக்க வேண்டும் என பொதுப்பணித் துறைக்கு முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
ரூ.328 கோடி செலவில் நடைபெறும் குடிமராமத்து பணிகள்: அரசு தகவல்
1 mins read

