கோவை: தமிழகத்தில் மிக விரைவில் 'முட்டை' வடிவில் ஓர் அணுகுண்டு வெடிக்கும் என்றும், அப்போது அதிகாரத்தில் உள்ள வர்கள் சிறைக்குச் செல்வார்கள் என்றும் அமமுக துணைப் பொதுச்செயலர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் கோவையில் அக்கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று உரையாற்றிய அவர், ஜெயலலிதா வால் கட்டிக் காத்து வளர்க்கப்பட்ட அதிமுகவையும் இரட்டை இலை யையும் மீட்கவே அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தொடங்கப் பட்டதாகக் குறிப்பிட்டார். "அதிமுகவின் கோட்டையாக கொங்கு மண்டலம் விளங்குகிறது. இதன் காரணமாகவே இப்பகுதியைச் சேர்ந்த பலரை சட்டப்பேரவை உறுப்பினர்களாவும் அமைச்சர்களாகவும் ஆக்கி அழகு பார்த்தார் ஜெயலலிதா.
"ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வம் செய்த சில தவறுகளால் கட்சியையும் ஆட்சியையும் பாதுகாக்கும் பொருட்டு அவரை நீக்கிவிட்டு கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ஒருவரை முதல்வராக்க விரும்பி னார் சசிகலா. அதனால்தான் எடப்பாடி பழனிசாமியை முதல்வ ராக்கினார்," என்றார் தினகரன். ஆனால், அதிகாரம் கைக்கு வந்தவுடன் சசிகலாவையே பழனி சாமி தரப்பு கட்சியை விட்டு நீக்கியதாகக் குறிப்பிட்ட அவர், நடப்பு ஆட்சியாளர்கள் சட்டப் பேரவையைக் காலி செய்து வெளி யேறும் காலம் வரும் என்றார்.
"வரும் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு நிச்சயம் வெற்றி பெறுவோம். அதன் பின்னர் பொதுச்செயலர் சசிகலா அனுமதி அளித்தால் மட்டுமே முதல்வர் பதவியில் அமர்வேன். இல்லையென்றால் கட்சித் தொண்டருக்குத்தான் அந்தப் பதவி.
"தற்போது திருச்செங்கோடு, ராசிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடைபெற்று வருகிறது. அதன் எதிரொலியாக 'முட்டை' வடிவில் அணுகுண்டு வெடிக்கும். இதேபோல் பல முறைகேடுகள் தொடர்பாக சோதனைகள் நடை பெறும். அவற்றின் மூலம் பல்வேறு உண்மைகள் வெளிவரும். அப்போது அதிகாரத்தில் உள்ள வர்கள் சிறைக்குச் செல்வார்கள்," என்றார் தினகரன்.

