தமிழில் 'நீட்' எழுதியவர்களுக்கு 196 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழில் 'நீட்' எழுதியவர்களுக்கு 196 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு

1 mins read

இந்தியாவில் மருத்துவக் கல்வி பயிலத் தகுதி பெறுவதற்கான 'நீட்' தேர்வில் இவ்வாண்டு தமிழில் கேட்கப்பட்ட 49 கேள்விகள் தவறாக மொழிபெயர்க் கப்பட்டிருந்ததால் தமிழில் தேர்வு எழுதிய அனைவருக்கும் 196 மதிப்பெண்கள் வழங்குமாறு சிபிஎஸ்இக்கு உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது. நீட் தேர்வை நடத்தும் சிபிஎஸ்இ புதிய தரவரிசைப்ப பட்டியலை 2 வாரங்களுக்குள் வெளியிட வேண் டும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய தரவரிசையின் அடிப் படையில் மருத்துவ மாணவர்க ளின் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்றும் அதில் குறிப் பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழில் தேர்வு எழுதிய மாணவர்களில் அதிக எ ண் ணி க் கை யி லா னோ ரு க் கு மருத்துவக் கல்வி பயிலும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், ஏற்கெனவே வெளி யிடப்பட்ட தரவரிசைப் பட்டியலின் அடிப்படையில் தமிழகத்தின் அனைத்து மருத்துவக் கல்லூரி களிலும் முதற்சுற்று மாணவர் சேர்க்கை நடைபெற்று முடிந்து உள்ளது. சுமார் 3,000 மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் இப் போது சேர்ந்துள்ளனர்.