தொப்பையைக் குறைத்தால் வேலையில் நீடிக்க முடியும்: கர்நாடகா

தொப்பையைக் குறைத்தால் வேலையில் நீடிக்க முடியும்: கர்நாடகா

1 mins read
ff31c4d2-86c9-46f1-8a3a-e29e3c372d96
-

பெங்களூரூ: தொப்பை போலிஸ் காரர்களுக்கு உடற்தகுதி குறித்த புதுக் கட்டுப்பாட்டை விதித்து உள்ளது கர்நாடக ரிசர்வ் போலிஸ் படை. இதன் கூடுதல் இயக்குநர் பாஸ்கர் ராவ் கடந்த மூன்றாம் தேதி வெளியிட்டுள்ள சுற்றறிக்கை ஒன்றில் இந்தக் கட்டுப்பாடு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக 12 தொப்பையற்ற காவலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு தொப்பை காவலர் களை சிறந்த உடற்தகுதியுடைய வர்களாக மாற்றும் பணி ஒதுக்கப் பட்டுள்ளது. தொப்பை போலிசுக்கு ஆரோக் கியமான வாழ்க்கை முறையை அறிவுறுத்தி தினமும் கடுமையான உடற்பயிற்சிகள் மற்றும் காவல் துறை நடைமுறைப் பணிகளை அளித்துக் குறிப்பிட்ட நாட்களுக் குள் உடல் எடையைக் குறைத்து ஆரோக்கியமான உடல் எடைக்குத் திரும்பச் செய்வதே இவர்களின் இலக்காகும்.

இந்த ஆணையைப் பின்பற்றி உடல் எடையைக் குறைக்கும் காவலர்கள் பணியைத் தொடர லாம். அப்படியல்லாது இப்போதும் உடல் எடையை குறைக்க முயலாத காவலர்கள் மீது துறை சார்ந்து கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதன் முதல் படியாக சுமக்க முடியாத தொப்பையுடன் நடமாடும் காவலர்களின் உணவு முறையில் மாற்றம் செய்யப்பட உள்ளது. எனவே வெள்ளை அரிசி சாதத் துக்குப் பதிலாக கேழ்வரகு கஞ்சி வழங்கப்படவுள்ளது. அதுமட்டுமல்ல காவலர்களுக் கான வழக்கமான பயிற்சிகளோடு சேர்ந்து தொப்பை காவலர்களுக்கு மட்டும் பரேடுகள் மற்றும் விளை யாட்டு நேரங்கள் அதிகரிக்கப்படு மாம்.