மும்பை: மகாராஷ்டிராவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தொடர் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை தொடங்கிய காலத்தில் இருந்து 1,362.8 மி.மீ மழை பதிவாகி உள்ளது. தென்மேற்குப் பருவமழை காலத்தில் பெய்ய வேண்டிய மழையில் 54 விழுக்காடு தற்போது பெய்துவிட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது. மும்பைக்குக் குடிநீர் விநி யோகம் செய்யும் துல்சி ஏரி நேற்று காலை முழு கொள்ளளவை எட்டி யது. இதையடுத்து அந்த ஏரியில் இருந்து உபரி நீர் திறந்து விடப் படுகிறது.
தொடர்ந்து நான்காவது நாளாக நேற்று நீடித்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதுடன் விமான, ரயில் சேவைகள் வெகுவாக பாதிக்கப் பட்டுள்ளன. மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டு உள் ளது. பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. தாழ்வான பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பாதுகாப்பான இடங்க ளுக்கு வெளியேற்றப்பட்டு வருகி றார்கள். இதற்கிடையே, வேலை முடிந்து வீடு திரும்பிய ஒருவர் திறந்து கிடந்த பாதாளச் சாக்கடையில் விழுந்து உயிரிழந்தார். கனமழை காரணமாக தண்ட வாளங்களில் தண்ணீர் தேங்கி உள்ளதால் ரயில் சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் கடந்த நான்கு நாட்களாக பெய்து வரும் தொடர்மழையால் சாலைகள் வெள்ளத்தில் முழ்கியுள்ளன. இதன் காரணமாக மனித உயிரைப் பறிக்கக்கூடிய பாதாளச் சாக்கடைகள் சாலையில் இருக்கும் இடம் தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பாதாள சாக்கடைகள் இருக்கும் இடங்களை அடையாளம் கண்டு அங்கு எச்சரிக்கை பலகை வைக்கும் நகராட்சி ஊழியர்கள். படம்: ராய்ட்டர்ஸ்

