பேரவை தலைவருக்கு எதிரான வழக்கு; பாஜக பிரமுகருக்கு நோட்டீஸ்

1 mins read

புதுடெல்லி: குஜராத் மேலவை உறுப்பினராக தான் தேர்ந் தெடுக்கப்பட்டதை எதிர்த்-துத் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்கக் கோரி காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் மனு தாக்கல் செய்திருந்தார். இம்மனுவை நேற்று பரிசீலித்த உச்ச நீதிமன்றம் விளக்கம் கேட்டு வழக்கு தொடுத்த பாஜக பிரமுகர் பல்வந்த்சிங் ராஜ்புத்திற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. கடந்தாண்டு குஜராத்தில் மேலவை உறுப்பினர் பதவிக்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் வெற்றி பெற்றார். காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்களின் வாக்குகளை தேர்தல் ஆணையம் ரத்து செய்ததை அடுத்து இந்த வெற்றி சாத்தியமானது. இதையடுத்து தோல்வியடைந்த பாஜக தலைவர் பல்வந்த் சிங் ராஜ்புத், அகமது படேலின் வெற்றிக்கு எதிராக குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.