குப்பையில் புதையும் டெல்லி; தண்ணீரில் மூழ்கும் மும்பை

குப்பையில் புதையும் டெல்லி; தண்ணீரில் மூழ்கும் மும்பை

1 mins read

புதுடெல்லி: தலைநகர் டெல்லி குப்பையில் புதைந்துகொண்டு வரும் சூழ்நிலையில், மும்பையோ வெள்ளநீரில் மூழ்கிக்கொண்டிருக் கிறது. மத்திய, மாநில அரசுகள் இதற்கு எல்லாம் ஒரு தீர்வு காணாமல் என்னதான் அப்படி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக் கின்றன என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. டெல்லியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றுவது தொடர் பான வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது நீதிபதி கள், "மலைபோல் தேங்கிக் கிடக் கும் குப்பைகளின் அடியில் டெல்லி புதைந்துகொண்டிருக் கிறது. அதேபோல் மும்பை நகரம் மழைநீரில் மூழ்குகிறது. ஆனால் அரசாங்கங்கள் எந்த நடவடிக்கை யும் மேற்கொள்ளவில்லை. ஆனால் இந்த விஷயங்களில் நீதிமன்றங்கள் தலையிட்டால் உடனே இதுகுறித்து எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கில் டெல்லியில் மலைபோல் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை அகற்றுவது மாநில அரசின் பொறுப்பா அல்லது மத் திய அரசின் பொறுப்பா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது. திடக்கழிவு மேலாண்மை குறித்து பதில் மனு தாக்கல் செய் யாத மேற்குவங்கம், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட 13 மாநில அர சுகள் புதுச்சேரி உள்ளிட்ட இரு யூனியன் பிரதேசங்களுக்கு உச்ச நீதிமன்றம் தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளது.