'மாநிலங்களவையில் இனி 22 மொழிகளிலும் விவாதம் நடத்தலாம்'

1 mins read

புதுடெல்லி: மாநிலங்களவையின் மழைக்காலக் கூட்டத் தொடரில் இதுவரை அனுமதிக்கப்படாமல் இருந்த சிந்தி, டோக்ரி, காஷ்மீரி, கொங்கணி, சன்டாலி ஆகிய 5 மொழி களிலும் உறுப்பினர்கள் பேச அனுமதிக்கப்பட்டுள்ளனர். இனி மாநிலங்களவையில் 22 இந்திய மொழிகளிலும் விவாதிக்கலாம் என துணை அதிபர் வெங்கைய்யா நாயுடு தெரிவித்துள்ளார். தடையின்றி எண்ணங்களை வெளிப்படுத்த தாய்மொழியே சிறந்தது எனத் தாம் வலியுறுத்தி வருவதாகத் தெரிவித்த வெங்கைய்யா நாயுடு, மழைக்காலத் தொடர்முதல் தமது நீண்டநாள் கனவு நனவாகப் போவதாகத் தெரிவித்துள்ளார்.