பெங்களூரு நகரத்தில் எமதர்மர் வேடமணிந்த நபர் ஒருவர் வீதி வீதியாகச் சென்று சாலை விபத்துக் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவது அப்பகுதி பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. பெங்களூருவின் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் சாலை விபத்துகளைக் குறைக்கும் வண்ணம் காவல்துறையினர் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மேடை நாடகக் கலைஞர் ஒருவருக்கு எமதர்ம ராஜா வேடமணிந்து போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் வித்தியாசமான முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். "இந்தியாவில் ஒவ்வொரு 4 நிமிடத்திற்கும் ஒரு நபர் சாலை விபத்தில் உயிரிழந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடாந்து சாலை விபத்துகளைக் குறைக்கும் வண்ணம் இதுபோன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எமதர்மர் வேடமணிந்த நபர் தலைக்கவசம் அணியாதவர்களுக்கும் சாலை விதிகளை மதிக்காத வாகன ஓட்டிகளுக்கும் ரோஜாப் பூவை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்," என்று காவல்துறை அதிகாரி அனுபம் அகர்வால் தெரிவித்துள்ளார். படம்: ஊடகம்
தெருதெருவாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் எமதர்மர்
1 mins read
-

