கேரளாவில் ஏழு நாட்களுக்கு கனமழை தொடரும்

கேரளாவில் ஏழு நாட்களுக்கு கனமழை தொடரும்

1 mins read

திருவனந்தபுரம்: கேரள மாநிலத் திலும் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் இன்னும் ஏழு நாட்களுக்குக் கனமழை பெய்யும் என்று கொச்சி வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மணிக்கு 45 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனால் நான்கு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக் கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம், பாலக்காடு, மலப்புரம், எர்ணாகுளம், கோழிக் கோடு, காசர்கோடு, வயநாடு ஆகிய பகுதிகளில் அதிகளவு மழை பெய்துள்ளது. பலத்த மழை காரணமாக எர் ணாகுளம், கோழிக்கோடு, கண் யூர், பாலக்காடு ஆகிய 4 மாவட் டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.