மணிப்பூர் நிலச்சரிவில் ஒன்பது பேர் உயிரிழப்பு

மணிப்பூர் நிலச்சரிவில் ஒன்பது பேர் உயிரிழப்பு

1 mins read

இம்பால்: கனமழை காரணமாக மணிப்பூரின் தாமங்லாங் நகரில் நேற்று அதிகாலை மூன்று இடங் களில் நிலச்சரிவு ஏற்பட்டதில் எட்டு குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் உயிரிழந்தனர். காயம் அடைந்த எழுவர் தாமங் லாங்கில் உள்ள மாவட்ட மருத் துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். "ஒன்பது பேரின் விலைமதிப் பற்ற உயிர் போனது குறித்து ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். எழுவரின் உடல் கள் மீட்கப்பட்டுள்ளன. இரு குழந் தைகளின் உடல்கள் இன்னும் மீட்கப்படவில்லை. மீட்புப் பணிகள் தொடர்கின்றன," என்று மணிப்பூர் மாநில முதல்வர் பைரன் சிங் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். வடகிழக்கு மாநிலமான மணிப் பூரின் தாமங்லாங் மாவட்டம், நியூ சேலம் கிராமத்தில் நேற்று காலை திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது அந்த மலையடிவாரத்தில் இருந்த வீடுகள் மீது மண் சரிந்து கொட்டியது. மலை உச்சியில் இருந்த சில வீடுகளும் இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் தீய ணைப்பு படையினர் மீட்புப் பணி யில் ஈடுபட்டுள்ளனர். மக்களும் அவர்களுக்கு உதவிவருகின்றனர்.