கொட்டும் கனமழைக்கு எழுவர் பலி; ரயிலில் சிக்கிய 2,000 பேர் மீட்பு

கொட்டும் கனமழைக்கு எழுவர் பலி; ரயிலில் சிக்கிய 2,000 பேர் மீட்பு

1 mins read

மும்பை: இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள், மாவட்டங்கள், நக ரங்களில் கடந்த ஐந்து நாட்களாக கனமழை விடாது தொடர்ந்து பெய்து வருகிறது. ஐந்தாவது நாளாக தீவிரமடைந்துள்ள இந்த பருவமழைக்கு மகாராஷ்டிரா மாநிலத்தில் எழுவர் உயிரிழந்தனர். மோசமான வானிலை காரணமாக ரயில் சேவையுடன் 407 விமானங்களின் சேவையிலும் தாமதம் ஏற்பட்டது. மகாராஷ்டிரா மாநிலம், யவத் மால் மாவட்டத்தில் நால்வரும் தானே, பால்கர் மாவட்டத்தில் தலா ஒருவரும் மும்பை பெருநகரில் ஒருவரும் என எழுவர் இந்த கனமழை, வெள்ளத்துக்குப் பலி யாகினர்.

மகாராஷ்டிராவில் மும்பையிலும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களை யும் கனமழை புரட்டி எடுத்து வருகிறது. கனமழையால் மும்பை பெருநகரம், தானே, பால்கர், ராய்காட் மாவட்டங்கள் வெள் ளத்தில் மிதக்கின்றன. மும்பையில் பலத்த கனமழை காரணமாக எங்கு பார்த்தாலும் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. நெடுஞ்சாலைகள், தெருக்கள், குடியிருப்புப் பகுதிகள், ரயில் நிலையங்களில் தேங்கியுள்ள நீரை நீர் இறைக்கும் இயந்திரங்களை வைத்து வெளியேற்றி வருகின்றனர்.