தூத்துக்குடி: சென்னை - சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்திற்குக் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ள நிலையில் இத்திட்டத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி களம் இறங்கியுள்ளது. இதற்காக என் நிலம் என் உரிமை என்ற தலைப்பில் அக்கட்சியினர் நடைப்பயணம் மேற்கொள்ள உள்ளனர். "பசுமைச் சாலைத் திட்டத்திற்கு நிலம் தர மறுக்கும் விவசாயிகள் கடும் அச்சுறுத்தலுக்கு ஆளாகின்றனர். கிராம மக்கள் வீட்டுச் சிறைக்குள் அடைக்கப்பட்டது போன்ற சூழ்நிலை நிலவுகிறது," என மார்க்சிஸ்ட் கட்சி சாடியுள்ளது.
'என் நிலம் என் உரிமை' மார்க்சிஸ்ட் கட்சியின் புதிய முழக்கம்
1 mins read

