சென்னை: தமிழகத்தில் இந்த ஆண்டு தென்மேற்குப் பருவ மழை வழக்கத்தைக் காட்டிலும் கூடுதலாகப் பெய்துள்ளது.
தமிழகம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கடந்த ஜூன் 1 முதல் 11ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் கூடுதலாக 27 விழுக்காடு மழை பெய்துள்ளது. இதனை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
நடப்பாண்டில் ஜூலை 11ஆம் தேதி வரை தென்மேற்குப் பருவமழை சுமார் 86 மில்லிமீட்டர் அளவுக்குப் பெய்துள்ளதாக மையம் தெரிவித்தது.
இதற்கிடையே கர்நாடகாவில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் அங்குள்ள பெரும்பாலான அணைகள் நிரம்பி வழிகின்றன. காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கேஆர்எஸ் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதற்கிடையே மேட்டூர் அணையும் வேகமாக நிரம்பி வருகிறது.

