இந்தியாவின் முகேஷ் அம்பானி ஆசியாவிலேயே ஆகப்பெரிய பணக்காரராக ஆகியிருக்கிறார். சீனாவின் அலிபாபா குரூப் என்ற குழுமத்தை நிறுவியவரான ஜாக் மாவைவிட அதிக சொத்து மதிப் புடன் முகேஷ் அம்பானி இப்போது திகழ்கிறார். இந்தியாவில் எண்ணெய்ச் சுத்திகரிப்பு முதல் தொலைத் தொடர்பு வரை பல துறைகளிலும் பேராதிக்கம் செலுத்தும் அம்பானி யின் சொத்து மதிப்பு, ஜூலை 13ஆம் தேதி நிலவரப்படி US$44.3 பில்லியன் (S$60.5 பில்லியன்) என்று தெரிவிக்கப்பட்டது.
அமெரிக்காவில் பங்குச் சந்தையில் வர்த்தகம் வெள்ளிக்கிழமை முடிவடைந்த நிலையில், ஜாக் மாவின் சொத்து மதிப்பு US$44 பில்லியனாக இருந்தது. 2018ல் மட்டும் அம்பானி, US$4 பில்லியன் சொத்து சேர்த்து இருக்கிறார். இந்த ஆண்டில் இதுவரை அலி பாபா குரூப் ஹோல்டிங்ஸ் நிறு வனத்தின் உரிமையாளரான ஜாக் மா, US$1.4 பில்லியன் இழந்து இருக்கிறார். இந்த விவரங்களை புளூம்பர்க் கோடீஸ்வரர்கள் அட்ட வணை தெரிவித்துள்ளது.

