தம்பிதுரை: ஊழல் நடந்துள்ளது என்றால் பாஜக ஆதாரபூர்வமாக நிரூபிக்க வேண்டும்

தம்பிதுரை: ஊழல் நடந்துள்ளது என்றால் பாஜக ஆதாரபூர்வமாக நிரூபிக்க வேண்டும்

1 mins read
3365d60a-ca64-4aaf-9677-7f803e843823
-

கரூர்: ஆட்சிக்கு வந்தால் ஊழலை ஒழிப்போம் என்று கூறிய பாஜக இதுவரை எத்தனை ஊழல்களைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்துள்ளது என மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை கேள்வி எழுப்பியுள்ளார். 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் மேல்முறையீடு செய்வதில் பாஜக அரசு மெத்தனமாகச் செயல்படுவ தாகவும் அவர் சாடியுள்ளார். நேற்று முன்தினம் கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய தம்பி துரை, தமிழக அமைச்சர்கள் ஊழல் செய்ததற்கான ஆதாரங்கள் இருந்தால் பாஜகவினர் அதை உரிய வகையில் நிரூபிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

"பிரதமர் நரேந்திர மோடி எங்கள் நண்பர். ஆனால் பாஜக தலைவர்கள் அதிமுக ஆட்சியைப் பற்றிக் குறை சொன்னால் அதை ஏற்க மாட்டோம். தமிழகத்தில் சமூக விரோதிகள் ஊடுருவி வருவதாகத் தொடர்ந்து குற்றம் சாட்டிவரும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அத்த கைய ஊடுருவலைத் தடுக்க இதுவரை ஏதேனும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளாரா?" என்றும் தம்பிதுரை கேள்வி எழுப்பினார்.