கமல் கொதிப்பு: நானா போலி பகுத்தறிவாளன்?

கமல் கொதிப்பு: நானா போலி பகுத்தறிவாளன்?

1 mins read
e6f0cd68-7561-4437-919a-620434d0ac06
-

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியில் பல்வேறு மதத்தினரும், பல்வேறு நம்பிக்கை உள்ளவர்களும், பல்வேறு தரப்பினரும் உறுப்பினர்களாக உள்ளனர் என்று அதன் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். ஏழ்மை, ஊழலை ஒழிப்பதற்காகவே தாம் அரசியலுக்கு வந்திருப்பதாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார். "அமாவாசை தினத் தன்று கட்சிக் கொடியை ஏற்றியது குறித்து பாஜக மாநிலத் தலைவி தமிழிசை கூறுவது சரியாக இருக்க லாம். ஆனால், என்னைப் போலிப் பகுத்தறிவுவாதி என்று சொல்ல அவருக்கு என்ன உரிமை உள்ளது? "நான் பகுத்தறிவுவாதி தான். மக்கள் நீதி மய்யத் தில் உள்ள அனைவரும் பகுத்தறிவுவாதிகள் என்று கூற முடியாது. நான் அரசியலில் பகுத்தறிவுக் கொள்கையைப் பரப்பி மூடநம்பிக்கையை ஒழிக்க மட்டும் வந்திருந்தால் தவறாக இருக்கலாம். ஆனால், ஏழ்மை, ஊழலை ஒழிக்க வந்திருக்கும் எனக்கு எல்லோருடைய உதவியும் தேவைப்படுகி றது," என்றார் கமல் ஹாசன்.