மத்தியில் இருப்பது மதவாத அரசு: பாஜகவைத் தாக்கும் ராமதாஸ்

1 mins read
9ad2210f-9885-47af-994f-95d0e75d5f15
-

சென்னை: திமுக, அதிமுக தவிர்த்து தங்கள் தலைமையை ஏற்கும் எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்க பாமக தயாராக உள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்கப் போவதில்லை என்றும் காங்கிரசுடன் கூட்டணி அமைக்க தயார் என்றும் அவர் தெளிவுபடுத்தி உள்ளார். பாஜக ஆட்சிக்கு நூற்றுக்கு பூஜ்யம் மதிப்பெண்களை மட்டுமே வழங்க முடியும் என்று குறிப்பிட்டுள்ள அவர், மத்தியில் உள்ள பாஜக அரசானது, மதவாத அரசாகச் செயல்படுவதாகச் சாடியுள்ளார். காங்கிரஸ் கட்சி தற்போது திமுக கூட்டணியில் உள்ளது. இந்நிலையில் காங்கிரசுடன் கூட்டணிக்குத் தயார் என பாமக தலைமை கூறியுள்ளது திமுக வட்டாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்புக்கு முன்பே தமிழக அரசியல் களம் களைகட்டியுள்ளது.