வந்தவாசி: கோழிப்பண்ணையில் கொத்தடிமைகளாக இருந்த 22 பேர் மீட்கப்பட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வந்தவாசி அருகே உள்ள மணிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த தயாளன் (வயது 40) என்பவரின் கோழிப்பண்ணையில் பலர் கொத்தடிமைகளாக வேலை பார்க்கின்றனர் என்று அண்மையில் புகார் எழுந்தது. இதையடுத்துப் போலிசார் நேற்று முன்தினம் அங்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது வந்தவாசியைச் சேர்ந்த 22 பேர் கடந்த 4 ஆண்டுகளாக அப்பண்ணையில் கொத்தடிமைகளாக நடத்தப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர். தயாளனிடம் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
22 கொத்தடிமைகள் மீட்பு
1 mins read

